தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அரவிந்த்சாமி இவரை ஆணழகன் என்று கூறலாம் ஒரு காலகட்டத்தில் அரவிந்த்சாமி போல் மாப்பிள்ளை வேண்டுமென பலரும் விரும்பியதுண்டு அப்படி அரவிந்த்சாமியின் அழகு பெண்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவரான அரவிந்த்சாமி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
இயக்குனர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் நெட்பிளிக்ஸ் Ott இணையதளத்தில் வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி சமூக வலைதளத்தில் நவரச என்னும் வெப் தொடரை இயக்கினார். அதுமட்டுமில்லாமல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகி வரும் பிராஜக்ட் அக்னி என்ற எபிசோடில் நடித்துள்ளார். மேலும் அரவிந்த் சாமி நடிப்பில் நரகாசுரன் மற்றும் தலைவி ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கின்றன.
இந்தநிலையில் விஜய் இயக்கத்தில் தயாராகி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி திரைப்படத்திலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் அச்சு அசல் எம்ஜிஆர் போலவே தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அரவிந்த்சாமி அடுத்ததாக அஜித்குமார் திரைப்படத்தை இயக்கிய அமராவதி, ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த கர்ணா, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் அரவிந்த்சாமி இணைந்து நடித்த புதையல், நான் அவன் இல்லை என தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் செல்வா இயக்கத்தில் வணங்காமுடி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை மேஜிக் பாக்ஸ் பிலிம் சார்பில் எம்ஆர் கணேஷ் தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்தில் அரவிந்த்சாமி காவல் அதிகாரியாக நடிக்கிறார் அதுமட்டுமில்லாமல் சிம்ரன் ரித்திகா சிங் நந்திதா ஸ்வேதா சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது வணங்காமுடி படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.