உடலை குறைத்து ஒல்லியாக மாறிய அறந்தாங்கி நிஷா.! புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்

nisha
nisha

பொதுவாக விஜய் டிவி அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் விஜய் டிவி ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

அந்த வகையில் விஜய் டிவியின் காமெடி ஷோ மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை அறந்தாங்கி நிஷா. இவரின் பேச்சு திறமை ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.  இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு சமுத்திரகனி மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளிவந்த ஆன் தேவதை திரை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன்பிறகு விஜய் டிவியிலும் தற்பொழுது தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு அர்ச்சனா பின்னாடியே சுற்றியதால் தனது பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சில காலம் வெளியில் வராமல் மறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது தான் சில மாதங்கள் கழித்து சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். அந்த வகையில் மிகவும் குண்டாக இருந்த அறந்தாங்கி நிஷா திடீரென்று தன் உடலை குறைத்துள்ளார்.

aranthangi-nisha-weightloss-photo
aranthangi-nisha-weightloss-photo

நிகழ்ச்சியின் பொழுது இவர் நடத்திய போட்டோ ஷூட் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர் இது அறந்தாங்கி நிஷாவா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக மாறி உள்ளார். இதோ அந்த புகைப்படம்.