aranthangi nisha new house: பொதுவாக சின்னதிரையில் சாதிப்பதற்காக நாம் பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் அந்த வகையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்பது மட்டுமின்றி திருமணமானவர்களை ஒருபோதும் ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடுவது கிடையாது.
ஆனால் திருமணமான நிலையிலும் தன்னுடைய திறமையின் மூலமாக காமெடியில் கலக்கி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்த ஒரு நடிகை தான் அறந்தாங்கி நிஷா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த அளவிற்கு பிரபலம் ஆவதற்கு அவருடைய கணவர் கொடுத்த முழு ஒத்துழைப்பு தான் காரணம்.
அவருடைய கணவர் பெயர் ரியாஸ் அறந்தாங்கி நிஷா இந்த அளவிற்கு வளர்வதற்கு இவர் தான் காரணம் அது மட்டும் இல்லாமல் தற்போது அறந்தாங்கி நிஷா அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளது மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இவர் துறையின் முகம் காட்டி வருவது மட்டுமில்லாமல் தனக்கென ஒரு youtube சேனல் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டு அவர்கள் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் சூட்டிங் முடிந்து விட்டால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் சென்னைக்கும் தனது சொந்த ஊருக்கும் மாறி மாறி சென்று வருவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
இதன் காரணமாக அறந்தாங்கி நிஷா அவர்கள் சென்னையில் கஷ்டப்பட்டு ஒரு வீட்டை வாங்கி உள்ளார். இவர் அவர் வாங்கிய வீட்டினை youtube சேனல் ஒன்றில் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார் இவ்வாறு அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.
பொதுவாக அறந்தாங்கி நிஷா செய்த இந்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது ஏனெனில் பல பிரபலங்கள் முன்னணி நடிகர்களாக இருப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய அழகு மூலமாக பணத்தை சம்பாதித்து வருகிறார்கள். ஆனால் அறந்தாங்கி நிஷா தன்னுடைய திறமையின் மூலமாக தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த படிக்கு சென்றது பலரையும் வியக்க வைத்துள்ளது.