பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் காமெடிக்காகவே சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது அப்படி நடத்தப்பட்ட நிகழ்ச்சி தான் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் அறந்தாங்கி நிஷா. இவ்வாறு பிரபலமான நமது நிஷா சமீபத்தில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமாகியுள்ளார்.
பொதுவாக நகைச்சுவை செய்வது மட்டுமில்லாமல் நமது அறந்தாங்கி நிஷா நடனமாடுவது சமையல் செய்வது என பல்வேறு திறன்களை கொண்டுள்ளார். அந்த வகையில் இவருடைய குடும்பத்தாரும் இவருடைய பணிக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது அறந்தாங்கி நிஷா அவ்வப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம்தான் இந்நிலையில் ரசிகர்களின் கிண்டலும் கேள்வியும் அதிகமாக இருந்தாலும் அது எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு காமெடியாக இருப்பது மட்டுமில்லாமல் வித்தியாசமாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இது என்ன கெட்டப் என்று கண்டுபிடியுங்கள் என வடிவேலுவின் நாய் சேகர் கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் அப்படியே பார்ப்பதற்கு வடிவேலு போலவே இருக்கிறீர்கள் என்று அவரை கிண்டலடித்தது மட்டுமில்லாமல் நாய் சேகர் கதாபாத்திரத்திற்கு தேவையான பத்து பொருத்தமும் உங்களுக்கு பக்காவா இருக்கு என கிண்டலடித்து உள்ளார்கள்.