விஜய் தொலைக்காட்சியில் காமெடிக்கு என்று முக்கியத்துவம் கொடுத்து பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அதில் ஒன்றுதான் கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சி சீசன் சீசன் ஆக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் அதுபோல காமெடி திறமை உள்ளவர்கள்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயணித்து வருகின்றனர். அதில் சிலர் மக்கள் இடையே பெரிய அளவு பிரபலம் அடைந்து சினிமாவிலும் கால் தடம் பதித்துள்ளனர். அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பின்பு படிப்படியாக வளர்ந்து வருபவர் அறந்தாங்கி நிஷா.
இவர் பெண் காமெடியர்களில் பெரும் பிரபலம் ஆள் பார்ப்பதற்கு கருப்பாக இருந்தாலும் தனது காமெடி திறமை மூலம் பல ரசிகர்களை கட்டி ஈர்த்தவர். தற்போது விஜயில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்களிலும் நிஷா பங்கு கொண்டு வருகிறார். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரக்க்ஷன் உடன் இணைந்து தொகுப்பாளராக வளம் வந்தார்.
அதைத்தொடர் தற்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையிலும் மாகாபா உடன் இணைந்து தொகுப்பாளராக இருந்து வருகிறார். இப்படி விஜய் டிவியில் நல்ல பெயருடன் சுற்றி வந்த நிஷா ஒரு கட்டத்தில் பிக் பாஸ் சீசன் 4 யில் கலந்து கொண்டு தனது பெயரை கெடுத்துக் கொண்டார். இருந்தாலும் அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து விஜய் டிவியில் பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர நிஷா தனது கணவருடன் இணைந்து youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் பல வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமும் எண்ணற்ற பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். இந்த நிலையில் சென்னையில் புதிய வீட்டுக்கு நிஷா வாங்கியுள்ளார். அதனை வீடியோவாக தனது youtube பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.