தமிழ் சினிமாவில் பல்வேறு டாப் நட்சத்திரங்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சுந்தர் சி ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் இறங்கி அசத்தினார். ஆரம்பத்தில் அவர் படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் தோல்விகளை சந்தித்தது அதை உணர்ந்து கொண்ட சுந்தர் சி மீண்டும் படங்களை இயக்க அதிகம் ஆர்வம் காட்டினார்.
அந்த வகையில் பேய் மற்றும் காமெடி படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்து வந்த இவர் தற்போது பேய் படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அரண்மனை என்னும் படத்தை எடுத்தார் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது தற்போது அடுத்தடுத்த பாகங்களை எடுத்து மக்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.
அந்த வகையில் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி உள்ளது இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஆர்யா ராசி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, மனோபாலா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை அவனி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் டிரைலர் கூட அண்மையில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்ததால் தற்போது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஒரு சூப்பர் செய்தி அரண்மனை 3 படத்திலிருந்து வெளியாகி உள்ளது. அரண்மனை3 படத்திற்காக 12 அடி உயர சிலை ஒன்று செட் போட்டு படமாக்கப்பட்டது. அண்மையில் கூட நீங்க ட்ரைலரில் பார்த்து இருபீர்கள் ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட சிலையை உண்மையான லிங்கம் சிலை என நினைத்துக்கொண்டு பொதுமக்கள் கூட்டம் சாமி தரிசனம் தந்தனர். அதன் காரணமாக சில நாட்கள் சூட்டிங்கை தொடங்குவதில் தாமதம் ஆனதாக தெரிவித்தனர்.