அரண்மனை 3 : படத்தில் ஏன் மூன்று கதாநாயகிகள் தெரியுமா.? நச்சின்னு பதில் சொன்ன சுந்தர்.சி.

aranmananai-3
aranmananai-3

இயக்குனராக அவதாரம் எடுத்த பின் ஹீரோவாக அறிமுகமானவர் இயக்குனர் சுந்தர் சி. ஆரம்பத்தில் டாப் நடிகர்களை வைத்து படங்களை எடுத்து வந்த சுந்தர் சி தற்போது காமெடி, பேய் படங்களை எடுத்து கூறுவதோடு மட்டுமல்லாமல் காமெடி படங்களுக்கு எடுத்துக்கொள்வதால் புதுமுக நடிகர்களை பெரிதும் தேர்வு செய்கிறார்.

காரணம் படம் வசூல் வேட்டை நடத்தினால் போதும் என இருப்பதால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு புதுமுக நடிகர்கள் திரைப்படத்தில் நடிக்க கமீட் செய்கிறார். சுந்தர் சி சமீபகாலமாக பேய்ப் படங்களை எடுத்து வெற்றி கண்டு வருகிறார் அந்த வகையில் அரண்மனை சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் மூன்றாம் பாகம் அண்மையில் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படம் அக்டோபர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் வெளியாவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து படக்குழு அப்போது இந்த பட குழுவுடன் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் தேர்ந்தெடுத்தீர்கள் ஏன் என்று கேட்டனர் அதற்கு பதிலளித்த சுந்தர் சி.

அரண்மனை முதல் பாகம், இரண்டாம் பாகம் ஆகிய இரண்டு படங்களிலுமே மூன்று கதாநாயகிகள் இருந்தனர் அது போலவே தான் இந்த படத்திற்கும் வைத்தோம் மேலும் கதையின் தேவையற்ற மூன்று கதாநாயகிகளை செய்தோம் என கூறினார். படத்தின் கதைக்கு ஏற்றவாறு சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா, ராசிகண்ணா மூவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிறமொழிகளில் இருந்து வரும் நடிகைகள் தமிழ் பேசத் தெரியாமல் டப்பிங் சரியாக செய்யாமல் தமிழ் சினிமாவில் மாட்டிக் கொள்வார்கள் ஆனால் ராசிகண்ணா சிறப்பாக பேசியில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் அவருக்கு நல்லதொரு அங்கீகாரத்தை கொடுக்க அவரும் மென்மேலும் முன்னேற செல்ல உதவியாக இருக்கும் என கூறினார்.