Aranmanai 4: தமிழ் சினிமாவில் பேய் படம் என்றாலே நினைவுக்கு வருவது பலருக்கும் அரண்மனை திரைப்படம் தான் அந்த அளவு பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3 என நீண்டு கொண்டே போனது இந்த நிலையில் வெளியாகிய அனைத்து பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது நான்காவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏ சி எஸ் அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரிப்பில் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தில் சுந்தர் சி படத்தை இயக்கிய நடித்துள்ளார் இந்த நிலையில் தற்பொழுது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி இவர் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு
கொடுத்துள்ளார். இவரின் திரைப்படத்தை காண சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் இருப்பார்கள் இந்த
நிலையில் இவர் இயக்கத்தில் வெளியாகி அரண்மனை திரைப்படம் பேய் திரைப்படமாக உருவாகியது.
இதன் முதல் மூன்று பாகங்கள் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நான்காவது பாகத்தையும் இயக்கியுள்ளார். மிகப்பெரிய பொருட்ச
செலவில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது படத்தில் சுந்தர் சி அவர்களுடன் இணைந்து தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம் புலி, வீடீவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி விச்சு, கேஜிஎப் ராம், சந்தோஷ் பிரதாப் ,டி ராஜ் விஷ்ணு, ரத்தினம் ராமு, நாராயணன்,
மொட்டை ராஜேந்திரன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.
அதேபோல் முதல் மூன்று பாகத்தை போல் நான்காவது பாகமும் குடும்பத்துடன் கொண்டாடும் திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த
திரைப்படத்தை வருகின்ற பொங்கல் 2024 ஆம் ஆண்டு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.