சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஹாலிவுட் திரைப்படங்களை போல் அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை மூன்றாவது பாகம் உருவாகி வருகிறது இதற்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை முதல் பாகம், இரண்டாம் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
அரண்மனை முதல் பாகம் 2014ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வினை, ஹன்சிகா மோட்வானி, லட்சுமிராய், ஆண்ட்ரியா, சந்தானம், கோவை சரளா, மனோபாலா ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை இரண்டாவது பாகம் உருவானது இந்த இரண்டாவது பாகத்தில் சுந்தர் சி சித்தார்த், ஹன்சிகா மோட்வானி, த்ரிஷா, பூனம் பஜ்வா பரோட்டா சூரி, கோவை சரளா, மனோபாலா, ராதாரவி மேலும் சில பிரபலங்கள் நடித்து இருந்தார்கள்.
இதன் இரண்டாவது பாகம் வெற்றி பெற்ற நிலையில் சுந்தர்சி மூன்றாவது பாகத்தை இயக்கி வருகிறார் இந்த மூன்றாவது பாகத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராசி கண்ணா விவேக், யோகிபாபு ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த நிலையில் படத்தில் இருந்து சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இதில் யார் பேய் என்று குழப்பத்தில் இருக்கிறார்கள்.