சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரிடமும் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தன. இந்த படம் வெளிவருவதற்கு முன்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஏனென்றால் இயக்குனர் நெல்சனின் முந்தைய படங்களான டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் காமெடி ஆக்ஷன் என அனைத்தும் கலந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனால் நெல்சன் மற்றும் விஜயின் கூட்டணி வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில் பீஸ்ட் படம் வெளிவந்து மக்களின் எதிர்பார்ப்பை வீணாக்கி உள்ளது.
இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். மேலும் இதில் செல்வராகவன், விவிடி கணேஷ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி போன்ற பலரும் இடம்பெற்றுள்ளனர். பீஸ்ட் படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அமையாததால் விஜய் மற்றும் நெல்சன் இணைந்து அடுத்து ஒரு படம் பண்ணுவதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன.
படம் இப்படியிருக்க படத்திலிருந்து வெளிவந்த அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட்டானது. அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதி அனிருத் இசையமைத்துள்ளார் என்றுதான் நமக்குத் தெரியும். ஆனால் சமீபத்தில் சிவகார்த்திகேயன் அரபி குத்து பாடலை நான் எழுதவே இல்லை என உண்மையை போட்டு உடைத்துள்ளார்.
மேலும் அவர் கூறியது அனிருத் தான் அரபி வார்த்தைகளை வைத்து அரபி குத்து ஃபுல் பாடலையும் எனக்கு பாடி அனுப்பினார். நான் அதை முழுவதும் கேட்டுவிட்டு ஒரு சில இடங்களில் மட்டும் தமிழ் வார்த்தைகளை சேர்த்து அனுப்பினேன் அவ்வளவுதான் ஆனால் இது அனிருத் பாடல்தான் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.