விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ஆரவ். இவர் பிக்பாஸில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் இதற்கு முன் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார் ஆனால் அந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை அதுமட்டுமல்லாமல் மாடலாகவும் இருந்திருக்கிறார்.
இவர் பிக்பாஸில் இருக்கும்போது ஓவியாவை காதலித்தார். இவர் ஓவியாவிற்கு மருத்துவ முத்தம் கொடுத்ததை அனைவரும் அறிந்ததே. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகும் இருவரும் காதலில் இருந்தனர். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி இணையதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
ஆரவ் பிக்பாஸில் இருந்து வந்த பிறகு ராஜபீமா, மீண்டும் வா அருகில் வா போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது வருகின்ற செப்டம்பர் ஆறாம் தேதி திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வாவின் இமைபோல் காக்க படத்தின் நாயகி raahei என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். இதனையறிந்த ஓவியா ஆர்மியினர் ஆரவை திட்டி தீர்க்கின்றனர்.அப்ப ஓவியா அவளவு தானா என புலம்புகின்றனர்.