மாமன்னன் படத்தின் மிரட்டலான காட்ச்சியை வெளியிட்ட ஏஆர் ரகுமான்.!

ar-rahman
ar-rahman

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் மாமன்னன் படத்தின் ஒரு சில காட்சிகளை வெளியீட்டு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர், தயாரிப்பாளர், எம் எல் ஏ என பல பொறுப்புகளில் இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பல பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது மாரி செல்வராஜுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என அழுத்தமான திரைப்படத்தை கொடுத்துள்ளார் அதேபோல மாமன்னன் திரைப்படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மாமன்னன் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்கிறார் அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாமன்னன் திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து நேற்று பிறந்த நாளை கொண்டாடிய உதயநிதி ஸ்டாலினை பல சினிமா பிரபலம் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர் அந்த வகையில் நேற்று நடிகர் உதயநிதி ஸ்டாலினை கமல், விஷால், கீர்த்தி சுரேஷ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.

இப்படி பல பிரபலங்கள் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி வந்த நிலையில் மாமன்னன் திரைப்பட காட்சியை பார்த்து ரசிகர்கள் வியந்து போய் உள்ளார்கள். அது மட்டுமல்லாமல் இந்த படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விரைவில் இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.