இந்திய சினிமாவில் மிக முக்கியமான சிறந்த இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் தான் ஏ.ஆர்.ரகுமான் இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்திய மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கும் நிலையில் இந்தியாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு சிறந்த இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரிய கலைஞராகவும் இருந்து வரும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தமிழில் கடைசியாக சிம்புவின் பத்து தல படம் வெளியானது. இதனை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் கூட்டணியில் உருவாகி வரும் லால் சலாம் ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பிரபல வயலின் கலைஞர் சுப்பிரமணியத்துடன் ஏ.ஆர்.ரகுமான் உரையாடல் நேர்காணல் வீடியோவாக யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டது. அதில் ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் பழைய முறையில் இருந்து எப்படி புதுமுறையில் இசையமைப்பது என்பது பற்றியும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பயன்படுத்தி பல முயற்சிகளையும், சோதனைகளையும் செய்ய முடிந்தது என்பது குறித்தும் விளக்கி இவர் மேலும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட இந்திய படங்கள் ஏன் விருதுகளை பெறவில்லை என்பது குறித்து ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் விலக்கியுள்ளார்.
அவர் கூறுகையில், சில நேரங்களில் நமது படங்கள் ஆஸ்கார் வரை செல்கின்றனர். ஆனால் வெற்றி பெறவில்லை அதே சமயத்தில் சில தகுதியற்ற படங்களும் ஆஸ்க்கருக்கு அனுப்பப்படுகின்றன, அதைப் பார்க்கும்போது அதை அனுப்ப வேண்டாம் என தோன்றும் நாம் திரைப்படங்களை அனுப்புவதற்கு முன் மேற்கத்திய பார்வையிலிருந்து படங்களை தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்றார். ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இதுவரையிலும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.