இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் பாடகர் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள். பொதுவாக இந்தியாவில் ஏராளமான திறமையான பாடகர்கள், பாடகிகள் இருந்து வருகிறார்கள் மேலும் இசையமைப்பாளர்களும் இருந்து வரும் நிலையில் இவர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஒரே ஒரு பாடகர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் என்பது தெரியவந்துள்ளது.
அதாவது ஆஸ்கர் நாயகனான ஏ.ஆர் ரகுமான் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் பல வித்தியாசமான பாடல்களை தந்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் ஒரு பாடல் பாடுவதற்கு மட்டும் ரூபாய் 3 கோடி சம்பளமாக பெற்று வருகிறாராம்.
அந்த வகையில் மற்ற பாடகர்களை விட 10 மடங்கு அதிகம் சம்பளம் வாங்குபவர் இவர்தான் என கூறப்படுகிறது. பொதுவாக பிரபல பாடகர்கள் பாடல் ஒன்றுக்கு ரூபாய் 20 லட்சம் வாங்கி வருகிறார்கள் மேலும் மற்றவர்கள் ரூபாய் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை சம்பளம் பெற்று வருகிறார்கள். இவ்வாறு இதில் ஏ.ஆர் ரகுமான் மட்டும் தான் ஒரு பாடல் பாடுவதற்கு ரூபாய் 5 கோடி கூட வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை. ஏ ஆர் ரகுமான் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தன்னை பற்றி எந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியானாலும் அதற்கு விளக்கம் அளிப்பது உண்டு. மேலும் தன்னை யாராவது கலாய்த்தால் கூட அதற்கு பதில் சொல்லி வருகிறார் அந்த வகையில் இந்த ரூபாய் 3 கோடி விஷயத்தை தெரிந்தால் கண்டிப்பாக விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து படங்களில் ஒரு பாடல் பாட ரூபாய் 3 கோடி வாங்கும் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றால் அதற்காக ரூபாய் 1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அப்படி பார்க்கும் வகையில் மேடைகளில் பாட இன்னும் அதிக சம்பளம் வாங்கும் நபராக ஏ.ஆர் ரகுமான் விளங்குகிறார்.