தமிழ் சினிமாவில் ஆஸ்கர் நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அவர்களுடைய இசையமைப்பில் வெளிவரும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் பெற்று வருகிறது. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டவராக சினிமாவில் விளங்கி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவருடைய மகன் மும்பையில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் பயங்கர விபத்து ஏற்பட்ட நிலையில் கண்ணிமைக்கும் நொடியில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த நிலையில் அது குறித்து முதன்முறையாக ஏஆர் ரகுமான் அவர்கள் பேட்டியில் கூறியுள்ளார்.
பொதுவாக பிறப்பதும் இறப்பதும் கடவுளின் கையில் தான் இருக்கிறது யார் எப்பொழுது வேண்டாமானாலும், எப்படி வேண்டுமானாலும், எந்த நிமிடம் வேண்டுமானாலும் இறக்கும் நிலையில் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம் அப்படி ஒரு சிலர் வாழ்க்கையில் மட்டுமே இப்படி அதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் தன்னுடைய மகன் உயிர் தப்பித்தது குறித்து ஏஆர் ரகுமான் அவர்கள் சமீப பேட்டியில் இதற்கு எல்லா காரணம் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கும் கடவுளின் அனுகிரகம் தான். அதற்காக நாம் எப்பொழுதும் நன்றி செலுத்த வேண்டும் என்று ஏஆர் ரகுமான் அவர்கள் உணர்ச்சிபூர்வமாக சமீப பேட்டிகள் கூறியுள்ளார்.
மேலும் ரசிகர்கள் நீங்க இன்னும் கொஞ்சம் புண்ணியம் செய்யுங்கள்.. வெறும் பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு வெத்து வாழ்க்கை வாழாதீர்கள் என ஏஆர் ரகுமான் அளித்த பேட்டிக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏஆர் ரகுமான் அவர்களின் இசையமைப்பில் இந்த வருடம் மட்டுமே கிட்டதட்ட ஆறு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
அந்த வகையில் சிவகார்த்திகேயனின் அயலான், சிம்புவின் பத்து தல, பொன்னியின் செல்வன் 2 போன்ற படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படங்களில் ஏஆர் ரகுமான் அவர்களை இசையமைத்த பாடல்களை கேட்பதற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.