Ajith : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் அஜித்குமார். இவர் தன்னுடன் பயணிக்கும் திறமையானவர்களுக்கு வாய்ப்பை கொடுப்பது வழக்கம் அப்படி எஸ்.ஜே சூர்யா தொடங்கி இளம் நடிகர், இயக்குனர் என பலருக்கும் வாய்ப்புகளை கொடுத்து தூக்கி விட்டு இருக்கிறார்.
அப்படி ஏ ஆர் முருகதாஸின் திறமையை கண்டறிந்து அவருடன் கூட்டணி அமைத்தார் முதலில் தீனா திரைப்படம் உருவானது படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அடுத்து இந்த கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக இருந்தது சில காரணங்களால் அஜித் நடிக்க முடியாமல் போக நின்றது. அதன் பிறகு அஜித் -ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி இணையவே இல்லை. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
தீனா படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸ் அஜித் நடிப்பில் மிரட்டல் என பெயர் வைக்கப்பட்டது இந்த படத்தை எஸ் எஸ் சக்கரவர்த்தி தான் தயாரிக்க இருந்தார் படம் ஆரம்பித்து மூன்று நாட்கள் ஷூட்டிங் நடந்து விட்டது அதன் பின்னர் எஸ் எஸ் சிவசக்கரவர்த்திக்கும், அஜித்திற்கும் இடையே ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட அப்பொழுது அஜித் ஏ ஆர் முருகதாஸிடம் நீ என்னுடன் வந்துவிடு..
நாம் இந்த கதையை வேறு ஒரு தயாரிப்பாளர் வைத்து எடுத்துக் கொள்ளலாம் என சொல்லி இருக்கிறார் அவரிடம் முருகதாஸ் சரி என்று சொல்லிவிட்டு இந்த விஷயத்தை எஸ் எஸ் சக்கரவர்த்தியிடம் சொல்ல அவரோ முருகதாஸிடம் நான் உனக்கு படம் தருகிறேன் நீ என் பக்கம் நில் என்று சொல்லிப் பிடித்து வைத்துக்கொண்டார்.
இதில் அஜித்திற்கும், ஏ ஆர் முருகதாஸ் மீது மிகப்பெரிய கோபம் வந்துவிட்டது அதனை தொடர்ந்து அந்த படம் கைவிடப்பட்டது அதன்பிறகு ஏ ஆர் முருகதாஸ் இந்த கதையை யார் யாரிடமோ சொல்லி இருக்கிறார் ஆனால் யாரும் நடிக்க வரவில்லை கடைசியாக சூர்யாவுக்கு பிடித்து போகவே கஜினி என்ற பெயரில் படம் உருவானதாம்.