Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக இருக்கும் அஜித். ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் நம்பி நடித்து பல தோல்வி படங்களை கொடுத்தார். அப்படியே போனால் நாம் காணாமல் போய் விடுவோம் என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட அஜித்.
அதன் பிறகு இயகுனர்களிடன் கதை கேட்டு நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு இவருக்கு வெற்றி வந்தன. இப்போ தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். அஜித் கடைசியாக நடித்த துணிவு படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக 200 கோடி மேல்..
வசூல் செய்து பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து மகிழ் திருமேனி உடன் கூட்டணி அமைத்து “விடாமுயற்சி” படத்தில் நடிக்க இருக்கிறார் அதற்கான நடிகர், நடிகைகளை படக்குழு தீவிரமாக தேர்வு செய்து வருகிறதாம் வெகு விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இப்படி இருக்க அஜித் அடுத்து அனுபவம் வாய்ந்த முருகதாஸ், வெங்கட் பிரபு போன்ற இயக்குனர்களுடன் கைகோர்த்து படம் பண்ண வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் அஜித், முருகதாஸ் குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒரு பேட்டியில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
தீனா படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தும், முருகதாஸ்சும் இணைவதாக இருந்ததாம் அப்பொழுது முருகதாஸ் தனது சம்பளத்தை அதிகமாக கேட்க உடனே அஜித் அந்த பணத்தை அடிக்கினால் அந்த உயரமாவது நீங்க இருப்பீங்களா என கிண்டல் செய்தாராம்.. இந்த தகவல் சோசியல் மீடியால் பக்கத்தில் வைரலாகி வருகிறது.