AR Murugadoss : அஜித்தின் தீனா படத்தை இயக்கி திரை உலகில் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஏ.ஆர் முருகதாஸ். முதல் படமே பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து டாப் நடிகர்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்தார். விஜயகாந்த் வைத்து ரமணா, சூர்யாவை வைத்து கஜினி, விஜயை வைத்து கத்தி – சர்க்கார், மகேஷ்பாபு வைத்து ஸ்பைடர்..
ரஜினியை வைத்து தர்பார் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார். தொடர்ந்து டாப் நடிகர்களுடன் படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வருடங்களாக படம் இயக்காமல் தயாரிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.
முதலில் எங்கேயும் எப்பொழுதும் படத்தை தயாரித்தார் அந்த படம் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்வது அதிகம் கவனம் காட்டினார். அந்த வகையில் வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே, 10 எண்றதுக்குள்ள, ரங்கூன், ஆகஸ்ட் 16 1947 என அடுத்தடுத்த வெற்றி படங்களை தயாரித்து காசுகளை அள்ளினார்.
மேலும் ஒரு சில படங்களிலும் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் சினிமா உலகில் பன்முகத்தன்மை கொண்டவராக ஓடிக்கொண்டிருக்கும் ஏ.ஆர். முருகதாஸ் இன்று 49 – வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இதனை அறிந்த சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்தும் நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி ஏ ஆர் முருகதாஸின் சொத்து மதிப்பு சுமார் 72 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கும் காஸ்ட்லியான இயக்குனர்களில் ஒருவராக ஏ ஆர் முருகதாஸ் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.