தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக ஜொலிப்பவர் ஏ.ஆர் முருகதாஸ் இவர் முதலில் அஜித்தை வைத்து “தீனா” என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ரமணா, ஏழாம் அறிவு, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றதால் ஏ ஆர் முருகதாஸின் சினிமா பயணமும் உச்சத்தை தொட்டது.
இந்த நிலையில் தான் ரஜினியை வைத்து “தர்பார்” என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று படம் தோல்வியடைந்தது. இது ரஜினி சார் கேரியரிலும் சரி, ஏ ஆர் முருகதாஸ் கேரியர்களும் சரி மோசமான படமாக அமைந்தது அதன் பிறகு ஏ ஆர் முருகதாஸுக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
ஆம் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள 1947 என்னும் படத்தை தயாரித்து உள்ளார் ஓடிக்கொண்டிருக்கும் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதையை கூறி இருக்கிறார் அது ரொம்ப பிடித்து போகவே இந்த கூட்டணி உருவாக இருக்கிறதாம் இப்படி இருக்கின்ற நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பதிலளித்தார் ஏ ஆர் முருகதாஸ் “தர்பார்” படத்தின் தோல்வி குறித்து பேசி உள்ளார்.
அதில் அவர் சொன்னது.. நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன் இயக்குனர்கள் எல்லோருக்கும் அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கின்ற ஆசை வரும் நானும் அப்படித்தான் ஆனால் குறுகிய காலத்திலேயே அந்த படத்தை முடிக்க வேண்டியதாக இருந்தது ஏனெனில் ஆகஸ்ட் மாதத்தில் ரஜினி சார் அரசியல் கட்சி துவங்குவதாக இருந்தது அதோடு அதுதான்..
ரஜினி சாரின் கடைசி திரைப்படம் எனவும் சொல்லப்பட்டு வந்தது எனவே இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என அந்தப் படத்தை இயக்கினேன் எவ்வளவு திறமை வாய்ந்த இயக்குனராக இருந்தாலும் சரியான திட்டமிடல் இல்லாததால் குறைந்த காலத்தில் படத்தை இயக்கி முடிக்கும் நிர்பந்தம் இருந்தால் அது தோல்வியில் முடியும் என்பதை நான் தர்பார் படம் மூலம் கற்றுக் கொண்டேன் என ஏ ஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.