தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தனது அடுத்த படத்தில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் இணைய போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அந்த வகையில் இந்த படத்தில் இணைந்திருக்கும் நடிகர் நடிகைகள் குறித்து தகவல் கசிந்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு தற்போது அதிக எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. முதன்முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் படம் தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீதாராமம் படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான மருணாள் தாகூருக்கு தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. அந்த வகையில் தமிழிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. தற்பொழுது மிருணாள் தாகூர் சம்பந்தப்பட்ட காட்சிகள் டெஸ்ட் ஹிட் எடுத்திருப்பதாகவும் எனவே இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இதனை அடுத்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறி இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு சிவகார்த்திகேயன் அனிருத் இணைந்தாலே அந்த படம் மாஸ் தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வரும் நிலையில் இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்பொழுது இந்த படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற இருப்பதாகவும் மேலும் மற்ற படங்களை விட இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வண்ணாரப்பேட்டை பாடல் வெளியாகி சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.