ஏ ஆர் முருகதாஸ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், ரஜினி போன்ற நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இவர் தோல்வியை காணாத இயக்குனர் லிஸ்டிலும் இடம் பெற்றுள்ளார் இவர் 2012 ஆம் ஆண்டு தளபதி விஜயை வைத்து துப்பாக்கி என்னும் படத்தை எடுத்து அசதினார். இந்த படம் ஏ ஆர் முருகதாஸுக்கும் சரி விஜய்க்கும் சரி ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பது பெற்று சூப்பராக ஓடியது இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் வேற லெவலில் இருந்தன இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் 2014ஆம் ஆண்டு உருவான திரைப்படம் கத்தி இந்த படம் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக விவசாயத்தினர் தண்ணி இல்லாமல் போராடுவதை எடுத்துரைக்கும் ஒரு படமாக இருந்தது.
இந்த படமும் ரசிகர்களை தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சிறந்து விளங்கியது. கத்தி படத்தில் விஜய் டபுள் ரோலில் பின்னி பெடலெடுத்திருந்தார். இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து சமந்தா சதீஷ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் இந்த படத்தின் கதை சிறப்பாக இருந்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும் சூப்பராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கத்தி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பேசி உள்ளார். அதில் அவர் சொன்னது அடுத்த பாகத்தை மேலும் சிறப்பாக கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் சரியான கதைக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் இரண்டாம் பாகத்தை இயக்கும்போது நமக்குள் ஒரு வட்டத்தை போட்டுக்கொண்டு அதற்குள் கதையை கொண்டு வருவதற்கு செயல்படும் சூழல் ஏற்பட்டுவிடும் என்பதால் தனக்கு இரண்டாவது பாகத்தை எடுப்பது குறித்த அச்சம் இருந்ததாகவும் அதனால் துப்பாக்கி 2 படத்தை எடுக்க ஐடியா இருப்பதாகவும் கூறியுள்ளார்.