A.R. Murugadoss: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ் இவர் தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் ஆகியோர்களை வைத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய திரைப்படங்கள் தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்கார், தர்பார் ஆகியவை அடங்கும்.
இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார் ஏ ஆர் முருகதாஸ். அந்த வகையில் ஏ ஆர் முருகதாஸ் தயாரித்த திரைப்படங்கள் எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, மான் கராத்தே, பத்து என்றதுக்குள்ள, ரங்கூன் என ஆகிய திரைப்படங்கள் அடங்கும் இந்த நிலையில் ஏ ஆர் முருகதாஸ் தற்பொழுது 1947 என்ற திரைப்படத்தை தயாரித்தார்.
ஏ ஆர் முருகதாஸின் கனவு படம்
ஏ ஆர் முருகதாஸ் சமீபத்தில் ஒரு பெட்டியில் என்னுடைய கனவு படம் இதுதான் என ஒரு திரைப்படத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக தீனா திரைப்படத்திற்கு முன்பே தயாரிப்பாளர் சக்கரவர்த்தி அவர்களிடம் பேசினேன் அப்பொழுது சிட்டிசன் திரைப்படத்தை தொடங்கி இருந்தார் அதுமட்டுமில்லாமல் அஜித்தை தவிர வேறு யாரையும் வைத்து படம் பண்ண மாட்டேன் என கூறினார்.
உடனே ஏ ஆர் முருகதாஸ் நீங்க தேவர் பிலிம்ஸ் மாதிரி பேசுறீங்களே என கேட்க அதற்கு சக்கரவர்த்தி தேவர் பிலிம்ஸ்ல வர்ற விலங்குகளை வைத்து படம் எடுக்கிற மாதிரி ஒரு கதையை கொண்டு வா எனக் கூறினார் நானும் குரங்கை வைத்து ஒரு கதையை ரெடி பண்ணி சொன்னேன் அந்த கதை சக்கரவர்த்திக்கு மிகவும் பிடித்து விட்டது இந்த கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பொழுது தான் விலங்குகள் நல ஆணையத்தில் விதிகள் தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் சர்க்கஸ் என்ற கலாச்சாரம் ஏற்கனவே குறைந்து வருகிறது என பேசி அவர் தீனா திரைப்படம் கிடைக்கும்போது குரங்கு திரைப்படம் கைவிடப்பட்டது எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த கதையை முருகதாஸ் மனதிற்குள் வைத்துக்கொண்டு எப்படியாவது இந்த திரைப்படத்தை எடுக்க வேண்டும் என எண்ணத்தில் இருந்துள்ளார்.
பிறகுதான் டபுள் மேக்கர்ஸ் நிறுவனத்திடம் அந்த கதையை அனுப்பினேன் அவர்களுக்கும் கதை பிடித்து விட்டது கொரோனா காலகட்டத்தில் முன்னேற்பாடுகள் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது ஆனால் இந்தி திரையுலகம் நஷ்டப்பட்டதால் இந்த பிளான் அப்படியே நிலுவையில் இருக்கிறது அக்ஷய்குமார் நடிக்கிறேன் எனக் கூறியுள்ளார் என முருகதாஸ் கூறியுள்ளார்.