Ar murugadoss Dheena : தமிழ் சினிமாவில் ஏ ஆர் முருகதாஸ் முதன் முதலில் தீனா திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். அவருக்கு வாய்ப்பு கொடுத்ததே அஜித் தான் என பலரும் கூறியிருக்கிறார்கள். தீனா திரைப்படத்தில் அஜித், சுரேஷ்கோபி, லைலா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். அமர்க்களம் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அதிரடி ஆக்ஷனில் நடித்த திரைப்படம் தான் தீனா.
இந்தத் திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் முதலில் தயாரிக்க முன் வரவில்லை ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் ஒரு கதையை ரெடி செய்து விட்டு நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அவர்களிடம் கதையை கூறியுள்ளார். ஆனால் கதை அவருக்கு பிடித்து விட்டது இருந்தாலும் அமர்க்களம் திரைப்படம் இப்பொழுதுதான் வெளியானது அஜித் அதிரடி காட்சிகளில் நடித்தார் மீண்டும் அதே போல் திரைப்படம் அவருக்கு செட்டாகாது அதனால் வேற ஒரு கதையை ரெடி செய்து விட்டு வர சொன்னார்.
ஆனால் அமர்க்களம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்ததால் உடனே ஏ ஆர் முருகதாஸ் அவர்களை மீண்டும் அழைத்துள்ளார் சக்கரவர்த்தி கதையை சொல்ல சொன்னார் கதையும் அவருக்கு பிடித்து போய் பிறகு இந்த திரைப்படம் உருவானது. ஆனால் இந்த திரைப்படத்தில் அஜித் நடிப்பதற்கு முன்பு வேறு ஒரு நடிகர் நடிக்க இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது அஜித் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் பொழுது பிரசாந்த் முன்னிலையில் இருந்தார் தீனா திரைப்படத்தின் கதையில் முதன் முதலில் பிரசாந்த் அவர்கள் தான் ஹீரோவாக நடிக்க இருந்தது ஆனால் அப்பொழுது பிரசாந்த் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்ததால் பிரசாந்தால் தீனா திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.
இதனை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அஜித் நடித்ததால் தான் தீனா திரைப்படம் ஹிட்டானது என பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.