விஜய் மார்க்கெட்டை சரிக்க பிரபல நடிகருடன் கைகோர்த்த முருகதாஸ்.? அனல் பறக்கும் அடுத்த படத்தின் அப்டேட் இதோ.!

vijay-latest-news
vijay-latest-news

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருபவர் விஜய், தளபதி விஜய்க்கு முருகதாஸ் இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளன. இந்த நிலையில் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் முதலில் குழந்தைகளுக்கு பிடித்த திரைப்படமாக நடித்து வந்தார்,  அது மட்டும் இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வந்தார்,  இவரின் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

எந்த இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஆரம்ப காலத்திலிருந்து அறிமுக இயக்குனர்களின் இயக்கத்தில் தான் வாய்ப்பு கொடுத்து வந்தார் இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முன்னணி இயக்குனர்களுக்கு பட வாய்ப்பை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

அந்தவகையில் வேலைக்காரன் சீமராஜா ஹீரோ ஆகிய திரைப்படங்களை இயக்குவதற்கான வாய்ப்பை இயக்குனர்களுக்கு கொடுத்தார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் மற்றும் டாக்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது, அந்த வகையில் தமிழ் சினிமாவின் வசூல் இயக்குனர்களில் ஒருவரான ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் மான்கராத்தே திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெற்றி பெற்றார், அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் பலமுறை ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் தளபதி 65  திரை படத்தை இயக்குவதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த வாய்ப்பு நெல்சன் அவர்களுக்கு சென்றது,  இந்த நிலையில் ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறாராம்.

இவர்கள் இருவரும் இணைந்து புதிய திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர போகிறார்கள் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளன,  ஆனால் இதுக்குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இவர்கள் கூட்டணியில் திரைப்படம் உறுதியானால் செம்ம மாஸாக இருக்கும் என பெருமிதத்துடன் கூறி வருகிறார்கள்.