அணி கடித்த மாம்பழத்திற்கு அடித்துக் கொண்டது போல் சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிளுக்கு இவ்வளவு போட்டியா.! விலையை கேட்டா தலையே சுத்துதே..

silk sumitha
silk sumitha

Actress Silk Smitha: தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக தற்பொழுது வரையிலும் மனதில் குடியேறி உள்ளவர் தான் சில்க் ஸ்மிதா. உயிருடன் இல்லை என்றாலும் இவருடைய நினைவுகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தினை பிடித்திருக்கிறது.

அப்படி சமீபத்தில் கூட இவருடைய நினைவுகளை உணர்த்த வேண்டும் என்பதற்காக மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் ஒரு பெண்ணை அறிமுகம் செய்தார்கள் இந்த படமும் தற்போது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறது. அப்படி சில்க் ஸ்மிதா தற்பொழுது வரையிலும் மக்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கி விட்டு சென்றுள்ளார்.

பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு பேரழக இருந்த சில்க் ஸ்மிதா தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் இளவரசியாக வாழ்ந்து வருகிறார். ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமி என்ற பெயரில் பிறந்த வளர்ந்த இவர் பள்ளி படிப்பை நான்காம் வகுப்பிலேயே முடித்துள்ளார். இந்த சூழலில் நடிகையாக வேண்டும் என்று கனவுடன் சென்னைக்கு வந்த இவருக்கு எதிர்பாராத அளவிற்கு வெற்றி கிடைத்தது.

கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் உண்மையில் நல்ல குணம் கொண்ட இவர் தனது வளர்ச்சியை நன்றாக அனுபவிக்க முடியாமலேயே தற்கொலை செய்துக் கொண்டு இருந்தார். இவருடைய இறப்பு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களை உலுக்கியது. இந்நிலையில் தற்பொழுது சிலுக்கு ஸ்மிதா சாப்பிட்ட ஒரு ஆப்பிள் ஏலம் விட முடிவு செய்துள்ள நிலையில் அது எவ்வளவுக்கு ஏலம் போனது என்ற சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது படப்பிடிப்பின் பொழுது ஆப்பிளை கடித்துவிட்டு தனது அருகில் வைத்துள்ளார் சிலுக்கு ஸ்மிதா. அங்கிருந்த ஒருவர் அதனை எடுத்து சென்று அந்த ஆப்பிளை ஏலம் விட முடிவு செய்து இருக்கிறார். அந்த ஏலத்தில் சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ரூபாய் 200 வரை ஏலம் போனதாக கூறப்படுகிறது.