சூரரைப் போற்று பட நடிகை அப்பு ஆங்கில பத்திரிக்கைக்கு கொடுத்த கியூட்டான புகைப்படம்.!!

surarai-pottru
surarai-pottru

அபர்ணா முரளி மலையாள திரையுலக பிரபல திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இவர் மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளியான ”யாத்ரா துடருன்ணு” என்னும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் வாயிலாக மலையாளத்தில் நடித்து  திரையில் அறிமுகமானார்.

2016இல் மஹேஷிண்டே பிரதிகாரம் மற்றும் சண்டே ஹாலிடே என்ற திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் வாயிலாக மலையாள திரையுலகில் புகழ் பெற்றார்.இவர் தமிழில் 2017 ஆம் ஆண்டு ”8 தோட்டாக்கள்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 2019 இல் சர்வம் தாள மையம் என்னும் திரைப்படத்தின் நாயகியாக நடித்து புகழ் பெற்றார்.

இவர் 2020 ஆம் தமிழ் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான ”சூரரை போற்று” படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக புகழ்பெற்றார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அபர்ணா முரளியின் செல்லப்பெயர் அப்பு ஆகும். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகையாக இடம்பெற்றார்.

தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு அழகான போஸ் கொடுத்துள்ளார். அதிலிருந்து சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் மனதில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

aparna
aparna

 

aparna
aparna