அன்று சூர்யாவின் படத்தில் கும்பலோடு ஒரு ஓரமாக நடித்தவர் தான் இன்று சூர்யாவின் கதாநாயகி.! பலரும் பார்த்திடாத புகைப்படம்

suriya
suriya

மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர் தன்னுடைய திரைப் பயணத்தை மலையாள சினிமாவில்தான் தொடங்கினார் அதன்பிறகு தமிழில் முதன்முறையாக 2017ஆம் ஆண்டு 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு ஓரளவு வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது இதனை தொடர்ந்து மீண்டும் மலையாளத்திலேயே அதிக திரைப்படங்களில் நடித்து வந்தார் பின்பு சர்வம் தாள மயம் என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்திருந்தார் அதன் பின்  2020ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற சூரரைப்போற்று திரைப்படத்தில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது தீதும் நன்றும்  என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இவர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

abarna balamurali
abarna balamurali

என்னதான் இவர் பல தமிழ் திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் சூரரைப்போற்று திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டு பாராட்டப்பட்டது இந்த நிலையில் சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தில் முன் அந்தி என்ற பாடலின் ஒரு காட்சியில் ஒரு ஓரமாக தலையை காட்டியுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

abarna balamurali
abarna balamurali