தமிழில் 8தோட்டக்கள் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் அபர்ணா பாலமுரளி இவர் 8தோட்டக்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் திடீரென இவர் சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று விட்டது அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் சூர்யாவின் நடிப்பை விட அபர்ணா பாலமுரளி நடிப்பு மக்களை அதிகமாக கவர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும் இதில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.
சூரரை போற்று திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது கடந்த சில நாட்களாகவே ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல நடிகைகளும் தங்களுக்கு பிடித்த மாதிரி கேரளா புடவை அணிந்து விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நமது நடிகை அபர்ணா பாலமுரளி நிறைய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்.ஆம் பார்ப்பதற்கு இவரும் கேரள புடவையில் சும்மா நச்சுன்னு இருப்பது மட்டுமல்லாமல் தலை நிறைய மல்லிகை பூவைவைத்து ரசிகர்களை பித்து பிடிக்க வைத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இந்த புடவை மிகவும் அழகாக இருக்கிறது அதை விட நீங்கள் தலையில் வைத்திருக்கும் மல்லிகைப்பூ எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது என கமெண்ட் பதிவு செய்து இவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.