தமிழ் மட்டுமின்றி தெலுங்கு போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது மட்டும் இல்லாமல் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஷ்கா இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல மறக்க முடியாத திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவர் நடித்த அருந்ததி பாகுபலி போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரமாண்டமாக அமைந்தது மட்டுமில்லாமல் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது அந்த வகையில் வரலாற்று கதாபாத்திரம் கொண்ட திரைப்படம் என்றாலே இளவரசி கேரக்டர் நமது அனுஷ்கா தான் அந்த வகையில் இவருடைய தோற்றம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
அந்த வகையில் நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக உடல் எடையை அதிக அளவு ஏற்றியது பல்வேறு ரசிகர்களும் பாராட்டியது மட்டுமில்லாமல் அதுவே இவருக்கு பெரும் மன கஷ்டத்தை கொடுத்து விட்டது என்றே சொல்லலாம் ஏனெனில் அதன் பிறகு அந்த உடல் எடையை குறைப்பதற்கு அனுஷ்கா படாத பாடுபட்டுள்ளார்.
மேலும் இதன் காரணமாக அவருக்கு இருந்த பட வாய்ப்புகள் பலவும் பறிபோனது மட்டும் இல்லாமல் தற்போது ஒரு சில திரைப்படத்தில் முகம் காட்டி வந்த நமது நடிகை மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து வருகிறார். இன் நிலையில் அனுஷ்காவை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என ஏ எல் விஜய் அவர்கள் அனுஷ்காவை அணுகியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நமது நடிகை முதலில் சரி என்று சொல்லிவிட்டு பின்னர் அவருக்கு தைராய்டு பிரச்சனை அதிகமாக இருந்த காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தற்பொழுது செய்திகள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே நமது நடிகைக்கு வாய்ப்பு இல்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் தற்பொழுது கிடைத்த வாய்ப்பையும் மிஸ் செய்து விட்டார் என பலரும் வருத்தத்தில் உள்ளார்கள்.