பல வருட பட்டினியை தீர்த்துக் கொள்ளப் போகும் அனுஷ்கா..! தரமான கூட்டணியுடன் வெளிவந்த அதிகாரபூர்வமான அறிவிப்பு..!

anushka-new-movie
anushka-new-movie

தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை அனுஷ்கா இவர் தமிழ் மொழி மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக வலம் வந்தது மட்டுமல்லாமல் அவற்றில் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது மட்டுமின்றி இந்திய அளவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இவ்வாறு அந்த பிரபலத்தின் மூலமாக அனுஷ்காவின் புகழ் நாடெங்கும்  பரவி விட்டது.

ஆனால் இதை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்பு அதிகம் வரும் என நினைத்த நிலையில் ஏமாற்றம் தான் மிச்சம் இந்நிலையில் கடைசியாக நடிகர் மாதவனுடன் இணைந்து அமேசான் வீடியோவில் நிசப்தம் என்ற திரைப்படம் வெளியானது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகை அனுஷ்கா மற்றொரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.இவ்வாறு அவர் நடிக்கப்போகும் அந்த திரைப்படத்தை யூவி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது நடிகை அனுஷ்காவிற்கு நாற்பத்தி எட்டாவது திரைப்படமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

தற்போது அனுஷ்காவிற்கு 40 வயது நிரம்பிய நிலையில் மறுபடியும் சினிமாவில் வருவதைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டுமல்லாமல் ஒரு இன்ப செய்தியும் வெளிவந்துள்ளது.

அந்த வகையில் தற்போது அனுஷ்காவிற்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் தனக்கு வரும் மாப்பிள்ளை 6 அடி உயரம் இருந்தால் போதும் வசதி தேவையில்லை என கூறி உள்ளதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.