சினிமாவில் ஒரு நடிகை முன்னணி நடிகர்களின் ரேஞ்சுக்கு வளந்துள்ளார் என்றால் அவரின் மேல் சர்ச்சைகள் பஞ்சம் இல்லாமல் இருப்பது வழக்கம் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை அனுஷ்கா. தமிழ்,தெலுங்கு இரண்டு திரை உலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் விக்ரம், விஜய்,அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் தனது முத்திரையைப் பதித்தார். இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழை பெற்று தந்த திரைப்படம் பாகுபலி.
இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெரும் வெற்றியைப் பெற்று தந்தது. இவர் இப்படி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவதால் இவரின் மேல் பல பொய்யான சர்ச்சைகள் ஏற்பட்டு வருவது வழக்கமாக உள்ளது.
ஏனென்றால் தற்போது அனுஷ்காவுக்கு 39 வயதாகிறது. இந்நிலையில் இவர் பாகுபலி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இவருக்கு ஜோடியாக நடித்த பிரபாஸ் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. அதன்பிறகு கிரிக்கெட் வீரர் ரஞ்சி, 44 வயது தெலுங்கில் மனைவியை விவாகரத்து செய்த கோவலம்முடி உள்ளிட்ட பலரை அனுஷ்கா காதலிப்பதாகவும், திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அனுஷ்கா அனைத்தையும் மறுத்தார் .இதுகுறித்து அனுஷ்காவிடம் கேட்கும் பொழுது இப்பொழுது எனக்கு திருமணம் கிடையாது இதுவரையிலும் எந்த மாப்பிள்ளையும் பார்க்கவில்லை இதற்கும் மேற்பட்டு அப்படி நடந்தால் நானே கூறுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் அனுஷ்காவிற்கு நிச்சயதார்த்தம் என்றும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. அதோடு அந்த தொழிலதிபர் அனுஷ்காவை விட இளையவராம்.இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை.