தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு ஓடியவர் நடிகை அனுஷ்கா சினிமா உலகில் ஒரு கட்டத்தில் சோலோ படங்களும் கிடைத்தன அதிலும் தொடர்ந்து சிறப்பாக நடித்து தனக்கென ஒரு பிரம்மாண்ட ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி அசத்தினார்.
இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் தமிழில் நல்லதொரு இடத்தைப் பிடித்தார் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் உச்ச நட்சத்திரங்களான அஜித், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது பயணத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார் இப்படி பயணித்த இவர் தமிழில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை சற்று அதிகரித்து அதில் தனது திறமையை காட்ட நினைத்தார்.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வெளிவந்த படம் சிறப்பாக ஓடவில்லை அதன் பின்பு உடல் எடையை குறைக்க முடியவில்லை ஆனால் தென்னிந்திய சினிமா உலகில் பல பட வவாய்ப்பை இழந்தார். இருப்பினும் இவரது திறமை மற்றும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தது.
அந்த வகையில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் அனுஷ்காவை ஒல்லியாக காட்ட vfx முறையை பயன்படுத்தி நடிக்க வைத்தனர். அதைத் தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி உள்ளார். அந்தப் படத்தை ஏ. எல். விஜய் இயக்கவுள்ளார்.
இந்த புதிய படத்திற்கு முன்பாக ஏ எல் விஜய் மற்றும் அனுஷ்கா ஆகியோர் இணைந்து தெய்வத் திருமகள் படத்தில் பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போ அனுஷ்கா ரீ-என்ட்ரி கொடுக்கும் படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் மேலும் அனுஷ்கா கதாபாத்திரத்தை சுற்றித்தான் மொத்த கதையும் நகரும் என கூறப்படுகிறது.