சாய்பல்லவி நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் பிரேமம். இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்த படத்தினை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் இவருக்கு பல மொழி திரைப்படங்களிலும் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எனவே இதன் மூலம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அனுப்பமா பரமேஸ்வரன் தொடர்ந்த அடுத்த திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தவரும் இவருடைய நடிப்பில் கடைசியாக தெலுங்கில் 18 பேஜஸ் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் அனுப்புமா தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருவதன் காரணமாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்துள்ளாராம். இதுவரையிலும் ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூபாய் 60 லட்சம் சம்பளமாக வாங்கி வந்த அனுபமா தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வந்ததால் இதற்கு மேல் ரூபாய் 1 கோடியே 20 லட்சம் கேட்டுள்ளதாகவும் இந்த தொகையை தருவதற்கு தயாரிப்பாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளார்களாம்.
எனவே இவருக்கு அடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் சந்தித்து வருகிறார்கள். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இவர் கேட்கும் சம்பளத்தை தயாரிப்பாளர்கள் தர முடி எடுத்துள்ளார்கள் என கூறப்படுகிறது.