நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார், அதன்பின்பு மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு தெலுங்கு பக்கம் சென்றால் தெலுங்கிலும் நடித்து வந்த இவர் தமிழில் ‘கொடி’ என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானார்.
தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனால் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். இந்த நிலையில் தமிழில் ‘தள்ளிப்போகாதே’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஒளிவுமறைவு இல்லாமல் பேட்டி கொடுப்பார் அப்படி பேட்டி கொடுத்ததால் பல விமர்சனங்களுக்கு ஆளானார், அதனால்தான் சில காலம் மலையாளத்தில் நடிக்காமல் இருந்தார்.
இந்தநிலையில் அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் என்னுடைய கண்களும், சிரிப்பும் தான் எனக்கு அழகு என கூறியுள்ளார். அவருடைய தலைமுடி அடர்த்தியாக இருக்கக் காரணம் தினமும் தேங்காய் எண்ணெய் பூசுவது தான் என தன்னுடைய அழகின் ரகசியத்தையும் கூறியுள்ளார்.
மேலும் அனுபமா இதுவரை மூன்று திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் அனுபமாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.