சமீபகாலமாக பிரபலங்களின் சமூக வலைதள கணக்கை மர்மநபர்கள் ஹேக் செய்து முடக்குவது வாடிக்கையாக செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஹேக் செய்த சமூக வலைத்தளத்தில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு அவர்களை விமர்சிக்க வைத்து விடுகிறார்கள்.
அப்படித்தான் சமீபத்தில் குஷ்புவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து சர்ச்சையில் சிக்க வைத்தார்கள், அதேபோல் தற்போது அனுபமா பரமேஸ்வரன் சமூக வலைதளத்தினை ஹேக் செய்த ஹேக்கர்கள் விளையாடி வருகிறார்கள், அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் தமிழில் ‘கொடி’ என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அனுபமா பரமேஸ்வரன் தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தின் மூலம் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் திரைக்கு வர தயாராக இருக்கிறது அனுபமா அடிக்கடி தான் நடிக்கும் படத்தை பற்றியும் தன்னைப் பற்றியும் விவரங்களை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பகிர்ந்துகொண்டார் அதுமட்டுமல்லாமல் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
இந்தநிலையில் அனுபமா பரமேஸ்வரன் சமூக வலைதளத்தை யாரோ ஒருவர் ஹேக் செய்து அதில் கவர்ச்சியான பெண்ணின் உடலுடன் அவரின் முகத்தை ஒட்டி மார்பிங் செய்து புகைப்படத்தை வெளியிட்டுளளார்கள் இதைப் பார்த்த அனுபமா இது நான் கிடையாது என்னுடைய முகத்தை யாரோ மார்ப்பிங் செய்து உள்ளார்கள் என்று விளக்கம் கொடுத்தார் அதுமட்டுமில்லாமல் தற்போது சமூக வலைத்தளத்தில் அவர் சொக்க வைக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் என் மூச்சே நின்று போச்சு.. இன்னைக்கு யார் போன் சூடாக போகுதோ.. என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.