பிரபல முன்னணி நடிகரை காதல் வலையில் சிக்கவைத்த நம்ம வீட்டு பிள்ளை நடிகை அனு இமானுவேல்.!! வைரலாகும் புகைப்படம்.

anuimmanuvel2

தெலுங்கு, மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்து வெற்றி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனு இமானுவேல். விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை இமானுவேல். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகிவரும் மகா சமுத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அனு இம்மானுவேல் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனின் சொந்த தம்பியும், சிரஞ்சீவியின் மைத்துனர் மகனான அல்லு சிரிஷ் என்ற நடிகரை காதலித்து வருகிறார்.

நடிகரான அல்லு சிரிஷ் தமிழில் வெளியான கௌரவம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுக்கு இடையேயான காதல் தான் தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் டாப் செய்தியாக இருந்து வருகிறது.

alluanu-1
alluanu-1

இந்த நிலையில் சமீபத்தில் அனு இமானுவேலின் பிறந்த நாளை முன்னிட்டு அல்லு சிரிஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் இவர்கள் இருவரும் மிக நெருக்கமாக உள்ளனர். எனவே இவர்களுக்கு இடையேயான காதல் உண்மைதான் என தற்போது பாலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

allu-sirish