தூங்குவதை தவிர வேறு என்ன செய்கிறீர்கள் என கூறி மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அணு இம்மானுவேல்.! வைரலாகும் புகைபடம்

anu immanuvel

நடிகை அனுயா இம்மானுவேல் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார் இவர் மலையாள திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார், பின்பு தமிழில் முதன்முதலாக விஷால் நடித்த துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

துப்பறிவாளன் திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் பட வாய்ப்பு அமையாததால் பின்பு தெலுங்கு பக்கம் சென்றார் அங்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மீண்டும் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

கேரளாவில் பிறந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர், தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படும் நடிகைகளில் இவரும் ஒருவர் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்த நடிக்க இருக்கிறாராம்.

மேலும் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது அதேபோல் தமிழகத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனால் 144 தடை போடப்பட்டு அனைவரும் வீட்டிலேயே இருங்கள் என அறிவுருதபட்டுள்ளது.

இந்தநிலையில் அணு இம்மானுவேல் வீட்டிலேயே நெட் பிலிக்ஸ் பார்ப்பது அல்லது தூங்குவதை தவிர வேறு என்ன செய்கிறீர்கள் என கூறி மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அணு இம்மனவேல்
அணு இம்மனவேல்