இப்பொழுதுதான் பணக்காரனாக உணர்கிறேன் ரஜினி பேச்சு.. காரணம் தயாரிப்பாளர் கொடுத்த கார் தான்.! பின்னணி என்ன?

rajinikanth
rajinikanth

Rajinikanth: இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். வயதானாலும் கூட ரசிகர்கள் மத்தியில் இவருக்கென இருக்கும் மவுசு கொஞ்சம் கூட குறையவில்லை. அப்படி ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் என பல நாடுகளில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இதன் காரணத்தினால் இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் சுமாராக இருந்தாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது. அப்படி இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவில் பேசிய இவர் இப்பொழுது தான் நான் பணக்காரனாக உணர்கிறேன் என பேசி இருப்பது பலரையும்  வியக்க வைத்துள்ளது.

ரஜினிகாந்தின் பேச்சை கேட்ட ரசிகர்கள் எப்ப இதுதான் உலக மகா நடிப்புடா சாமி என ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஏன் அப்படி பேசினார் என வலைப்பேச்சு அந்தணன் விளக்கம் அளித்துள்ளார். 100 கோடி முதல் 200 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் ரஜினிகாந்த் சமீபத்தில் சன் பிரக்சஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றினை கொண்டாடும் வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோர்களுக்கு சொகுசு காரை பரிசாக வழங்கினார். இந்நிலையில் இப்பொழுது தான் நான் பணக்காரன் என உணர்கிறேன் என்று ரஜினி பேசியதற்கு பின்னாடி பெரிய கதையை இருக்கிறது. அதாவது, ஆரம்ப காலகட்டத்தில் ரஜினிகாந்த் துணை நடிகராக இருந்த பொழுது தயாரிப்பு நிறுவனத்தின் வாகனத்தில் தான் செல்வாராம்.

கவுண்டமணி வீடு ஆழ்வார்பேட்டையில் இருந்து ரஜினியின் வீடு மியூசிக் அகாடமி கிட்ட இருந்துச்சு ஒவ்வொருத்தரையா இறக்கி விட்டுட்டு கடைசியா தான் ரஜினியை இறக்கி விடுவாங்களாம். அதற்குள் பசி வந்து மயக்கமே வந்துவிடுமாம் இதையெல்லாம் அப்போதே ரஜினி கவுண்டமணியிடம் சொல்லி ஃபீல் பண்ணியிருக்கிறார். சொந்தமாக சம்பாதித்து ராஜா வாழ்க்கை வாழ்ந்தாலும் தயாரிப்பாளர் காசுல ஒரு கார் பரிசாக கிடைத்த பொழுது தான் அவருக்கு அந்த பழைய வாழ்க்கை எல்லாம் நினைவுக்கு வர அப்படி பேசி இருப்பதாக அந்தணன் கூறியுள்ளார்.