தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் ஆரம்பத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அதன் பிறகு மான் கராத்தே , யாமிருக்க பயமேன் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தற்போது யோகிபாபு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நகைச்சுவையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே, விக்ரம் நடிப்பில் வெளியான ஐ, அஜித் நடிப்பில் வெளியான வேலாயுதம், விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் போன்ற பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
அந்த வகையில் பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் தயாரிப்பில் உருவாகி வரும் அந்தகன் திரைப்படம் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது என்பது தெரிந்த ஒன்று. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படம் நிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் அந்தகன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இப்போதும் படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இன்னும் வெளிநாட்டு படப்பிடிப்பு மட்டும் சில நாட்கள் நடக்க வேண்டியது இருந்து வருகிறது.
அந்தாதுன் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் பிரசாந்த் அவர்கள் நடித்து வருகிறார் அவருடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கே எஸ் ரவிகுமார், கார்த்திக் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த வகையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது யோகி பாபு தன் காட்சிகளுக்காக டப்பிங்கை முடித்துள்ளார். இதை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தியாகராஜன் இணையதள பக்கத்தில் அறிவித்து உள்ளார்.