நடிப்பில் பின்னி பெடலெடுக்கும் உலகநாயகன் கமலஹாசன் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்த விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. வசூல் ரீதியாக 420 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் கிடப்பில் வைத்திருக்கும் அனைத்து படங்களையும் முடிக்க திட்டமிட்டு உள்ளார்.
முதலாவதாக இந்தியன் 2 படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாக அமெரிக்கா சென்று உள்ளார் தனது உடலை சீரமைத்துக் கொண்டு வந்தவுடன் செப்டம்பர் 13ஆம் தேதி ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. அதேபோல இயக்குனர் ஷங்கரும் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார்.
அந்த படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நோக்கி நகர்ந்து உள்ளது. அதை முடித்துவிட்டு ஷங்கர் இந்தியன் 2 படத்திற்கான வேலையை பார்ப்பார் என சொல்லப்படுகிறது. இந்தியன் 2 படத்தின் கொஞ்சம் காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் மீதி காட்சி படமாக்கப்பட இருக்கிறது இதனால் இந்த படத்தில் ஏற்கனவே நடித்த நடிகர் நடிகைகள் தற்போது மீண்டும் வர வைக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் விவேக் மற்றும் வேணு ஆகியோர் இறந்ததால் அந்த கதாபாத்திரத்திற்கு வேறு நடிகர்கள் நடிக்க பட குழு திட்டமிட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கமலுடன் பல்வேறு திரைப்படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ் இந்தியன் இரண்டாம் பாகத்தில் கமிட்டாக உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சத்யராஜ் கமலின் காக்கி சட்டை, விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார் ரஜினியின் மிஸ்டர் பாரத் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லனாக மிரட்டி வரும் சத்யராஜ் இந்த படத்தில் இணைந்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைத்துள்ளது ஆனால் இவருக்கு எப்படிப்பட்ட கதாபாத்திரம் இந்த படத்தில் இருக்கும் என்பதுதான் தற்பொழுது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.