நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக தொடர்ந்து ஆக்சன் திரைப்படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாக தான் இருந்து வந்துள்ளன இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்து வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை ஹச் வினோத் இயக்கி வருகிறார் பிரம்மாண்ட பொருள் செலவு தில் ராஜு தயாரிக்கிறார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். முதல் கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் பூனேவில் தொடங்கப்பட இருக்கிறது.
ஆனால் அஜித் தற்பொழுது ஐரோப்பிய நாடுகள் பக்கம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் வெகு விரைவிலேயே இந்தியா திரும்பி இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. அஜித் நடித்து வரும் 61 வது திரைப்படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக கொண்டு உருவாக்கி வருகிறது. அதனால் இந்த படத்தில் ஆக்சனுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என சொல்லப்படுகிறது இந்த படத்தில் நடிகர் அஜித்குமார் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.
ஒன்று வயது முதிர்ந்த கதாபாத்திரம் இன்னொன்று இளமை என சொல்லப்படுகிறது முதல் கட்ட படப்பிடிப்பில் இளமையான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளதால் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் அவர் ஒரு புதிய லுக்கில் நடிப்பர் என சொல்லப்படுகிறது.இது எப்படி இருக்க இந்த படத்தில் பல்வேறு புதிய நடிகர்கள் கமிட் ஆகி வருகின்றனர்.
AK 61 படத்தில் அஜித்துடன் இணைந்து சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர், வீரா, யோகி பாபு, மகாநதி ஷங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் உருவான வாரியார் படத்தில் வில்லனாக நடித்த அஜய். தற்பொழுது அஜித்தின் 61-வது திரைப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்திலும் அவர் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகின்றன.