சிவகார்த்திகேயனை விடாமல் துரத்தும் சோகம்.. மாவீரன் படத்திலிருந்து விலகிய மற்றொரு முக்கிய பிரபலம்.?

maveeran
maveeran

முன்னணி நடிகர் என்ற பட்டத்தை பெற ஒரு நடிகர் குறைந்தது 10, 15 வருடங்கள் எடுத்துக் கொள்கின்றனர் ஆனால் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகரின் அந்தஸ்தை பெற்றவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து ஆக்சன் காமெடி படங்களை கொடுத்து அசத்தி வருபவர்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் அஜித் விஜய் ரேஞ்சுக்கு இவரது பெயர் பேசப்பட்டது ஆனால் அடுத்த படமான பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்ததால் தற்போது சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது இதிலிருந்து மீண்டு வர மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன்.

திரைப்படத்தில் விறுவிறுப்பாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் இவருடன் இணைந்து அதிதி சங்கர், மிஷ்கின் என மிகப் பெரிய திரை பட்டாளம் நடித்து வருகிறது. ஆனால் இந்த படத்தின் படபிடிப்பின் போது இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது மறுபக்கம் இந்த படத்தின் சில காட்சிகள் சிறப்பாக வரவில்லை..

என்பதால் சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் சில காட்சிகள் எடுக்கப்பட்டது. இப்படி மாவீரன் திரைப்படத்தில் தொடர்ந்து ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருந்தது இப்படி இருக்கின்ற நிலையில் மாவீரன் திரைப்படத்திலிருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகி உள்ளது இன்னமும் அந்த பட குழுவுக்கு சிக்கலை அதிகப்படுத்தி உள்ளது ஆம் இந்த திரைப்படத்தை மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் தயாரித்து வந்தார்.

சீட்டிங் தொடர்ந்து நடைபெறுகிறது அதே நேரம் அதிக நாட்கள் இந்த படபிடிப்பு நடைபெறுவதால் பணம் எதிர்பார்த்ததை விட அதிகமாக செலவாகிறது என நினைத்து அன்புச்செழியன் இந்த படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சிவ கார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தையும் இவர் தான் கோபுரம் சினிமாஸ் மூலம் வெளியிட்டிருந்தார் அப்பொழுது இவருக்கு மிகப்பெரிய ஒரு நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.