டைம் லூப் அடிப்படையில் மாநாடு திரைப்படத்துடன் மல்லு கட்டிய மற்றொரு திரைப்படம்..! கடைசியில் நடந்தது இதுதான்..!

manadu

ஒரே நேரத்தில் பல திரைப்படங்கள் வெளியாகும் போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது அந்த வகையில்  வெவ்வேறு கதையம்சம் உள்ள திரைப்படங்கள் ஒன்றாக வெளிவந்தால் ஏகப்பட்ட பிரச்சனை வரும் ஆனால் ஒரே கதையம்சம் கொண்ட திரைப்படம் வெளியாகும்போது என்ன ஆகும் என்பது தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் சமீபத்தில் டைம் லூப்பை அடிப்படையாக வைத்து வெளியான திரைப்படம் தான் மாநாடு இந்த திரைப்படத்தைப் போலவே ஜாங்கோ திரைப்படமும் டைம்  லூப் அடிப்படையில் வெளியாகி வந்தது ஆனால் ரசிகர்கள் கொண்டாடியது எனவோ சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தை மட்டும்தான்.

மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் ஒரே கான்செப்ட் திரைப்படமாக தான் அமைந்தது ஆனால் அதில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மட்டுமே ரசிகர்களுக்கு புரியும்படி அமைந்தது ஜாங்கோ திரைப்படத்தில் கதை குழப்பம் இருந்ததன் காரணமாக பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் பல டைம் மெஷின் அடிப்படையில்  பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. அந்தவகையில் நேற்று இன்று நாளை மற்றும் 24 ஆகிய திரைப்படங்களை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சந்தானம் கூட டிக்கிலோனா என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வெற்றியையும் கொடுத்தது இந்நிலையில் இந்த அனைத்து திரைப்படங்களையும் முறியடித்த திரைப்படமாக தற்போது சிம்புவின் மாநாடு திரைப்படம் முன்னிலை வகிக்கிறது.