இயக்குனர் அட்லீ இதுவரை குறைந்த திரைப்படங்களை எடுத்திருந்தாலும் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்று இருக்கிறார் அதற்கு காரணம் இவர் எடுத்த படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் தான் அதிலும் குறிப்பாக விஜய் வைத்து இவர் எடுத்த தெறி, பிகில், மெர்சல் போன்ற படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றன.
இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களை வைத்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் என இயக்குனர் அட்லீ அக்கடதேசம் தாவி உள்ளார் அதாவது ஹிந்தி பக்கம் தாவி தற்போது ஷாருக்கான் வைத்து ஜவான் என்னும் படத்தை இயக்கி வருகிறார்..
ஜவான் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கனுடன் கைகோர்த்து நயன்தாரா, யோகி பாபு, சானியா மல்கோத்ரா, பிரியாமணி, மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த வருகின்றனர். அதே சமயம் இந்த படத்தில் விஜய் கேஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ராணுவத்தை சம்பந்தமாக வைத்து உருவாகி வருகிறதாம் ..
இந்த படம் அடுத்த வருடம் நவம்பர் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது இந்த படமே எடுத்து முடிக்கவில்லை.. அதற்குள்ளையே இயக்குனர் அட்லீக்கு இன்னொரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. பாலிவுடில் டாப் ஹீரோவாக இருக்கும் மற்றொரு நடிகர் சல்மான் கான் அவர் அட்லீயுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறாராம் அதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தையும்..
தற்போது சோராக நடந்து வருகிறதாம் ஷாருக்கானை தொடர்ந்து நடிகர் சல்மான் கான் உடன் இயக்குனர் அட்லீ இணைய உள்ளதால் பாலிவுட்டிலும் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை வெகு விரைவிலேயே அட்லீ பிடிப்பார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..