தனத்திற்கு அடித்த மற்றொரு அதிர்ஷ்டம்.. சிக்கலில் பாண்டியன் ஸ்டோர்.

sujitha

கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக மக்களின் பேராதரவை பெற்று சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பாகி வருவது பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் ஒரு கூட்டு குடும்ப கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. நான்கு அண்ணன் தம்பிகள் அவர்களை திருமணம் செய்து கொண்டு வரும் பெண்களும்..

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இருந்தும் உறவினர்களால் சில பிரச்சனை ஏற்பட்ட போதும் அதனை சரி செய்து ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது வந்த ப்ரோமோவில் கூட பாண்டியன் ஸ்டோர் வீட்டில் புதிதாக கார் ஒன்று வாங்க உள்ளனர். அதனால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இந்த சீரியல் மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமோ அதே போல இதில் நடிக்கும் ஜீவா, தனம், கண்ணன், மூர்த்தி, கதிர், முல்லை, மீனா போன்ற பல கதாபாத்திரங்களும் மக்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்.

இதில் மெயின் ரோலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா இளம் வயதில் சில படங்களில் நடித்தார் பின்பு சீரியல் பக்கம் இறங்கியுள்ளார். தமிழில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரை தெலுங்கில் ரீமேக் செய்து ஒளிபரப்பப்பட்டது. அதிலும் முக்கிய ரோலில் சுஜிதா நடித்து வந்தார். அந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்து விட்டது.

இந்த நிலையில் தற்போது சுஜிதா தெலுங்கில் ஒரு புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளார். அதற்கு கீதாஞ்சலி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழில் ஒளிபரப்பப்பட்ட செவ்வந்தி தொடரின் ரீமேக் எனவும் கூறப்படுகிறது. இந்த சீரியலில் தனம் மெயின் ரோலில் நடிக்க உள்ளதால் பாண்டியன் ஸ்டோர் தொடர் என்ன ஆகும் என பலருக்கும் கேள்விக்குறியாக இருக்கிறது.

sujitha
sujitha