சமீப காலங்களாக தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரை பிரபலங்கள் இறந்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அதாவது உடல்நலம் நன்றாக இருக்கும் நிலையில் பலரும் எதிர்பாராத நேரத்தில் இறந்து விடுகின்றனர். அந்த வகையில் சில நாட்களாக அடுத்தடுத்து ஏராளமான திரை பிரபலங்கள் உயிரிழந்து இருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்தின் பட தயாரிப்பாளர் பாபுஜி உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ரசிகர்கள் மனதை கவர்ந்து உள்ளார் இவ்வாறு ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் இவர் தன்னுடைய இளம் வயதில் நடித்த திரைப்படங்கள் தான்.
அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த காளி, கர்ஜனை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இந்த திரைப்படங்களை தயாரிப்பாளர் பாபுஜி தான் தயாரித்திருந்தார். தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளர்களில் பாபுஜியும் ஒருவர்.
அந்த வகையில் கின்னஸ் சாதனைக்காக நிகழ்த்தி மிகவும் பிரமாண்டமாக உருவான சுயம்வரம் திரைப்படத்தின் தயாரித்தவர் தான் இவர் இந்த படம் வெறும் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட நிலையில் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியது. இந்த படத்தில் பிரபு தேவா, பிரபு, கார்த்தி உள்ளிட்ட ஏராளமான முக்கிய கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர்.
இவ்வாறு நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக பாபுஜியும் கலக்கி வந்தார். இதன் மூலம் பிரபலமான இவர் கில்டு அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்தார் இப்படி புகழ் பெற்ற தயாரிப்பாளர் இன்று காலமானார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய வேதனை ஏற்படுத்தி உள்ளது.