இளையதளபதி விஜய் தனது அடுத்த சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுப்பதற்காக கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறார் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருவதால் இந்த திரைப்படம் எப்பொழுது முடிவடையும் என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக பீஸ்ட் திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஜார்ஜியா மற்றும் சென்னை,டெல்லி போன்ற பல இடங்களில் நடந்து விட்டது இந்த திரைப்படம் எப்பொழுது முடிவடையும் என பல ரசிகர்களும் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்கள் இறுதியாக இயக்கிய டாக்டர் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.
இந்நிலையில் தற்பொழுது பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து ஒரு புதிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஆம் என்ன தகவல் என்று கேட்டால் பீஸ்ட் திரைப்படத்தில் கொலவெறி என்ற வார்த்தையுடன் ஒரு பாடல் அமைந்துள்ளதாகவும் அந்த பாடல் ஏற்கனவே பட குழு முடித்துவிட்டதாகவும் படக்குழுவினரிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கூடிய சீக்கிரம் இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் இந்த பாடல் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற வாய்ப்பிருக்கிறது எனவும் பல தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
மேலும் தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை முடித்த கையோடு தனது அடுத்த திரைப்படத்திலும் நடிக்க போகிறார் எனவும் தகவல் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் நடிக்கப்போகும் அந்த திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்குவார் என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.