கமலின் “இந்தியன் 2” படத்தில் இணையும் மற்றொரு முன்னணி நடிகர்..! அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..

indian 2

கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் இந்தியன். இந்த படம் அப்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க முன் வந்தார். அதற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்து படப்பிடிப்பு ஆரம்பமானது.

இது படத்தை பிரமாண்ட பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்க முன் வந்தது. படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு துவங்கி பாதி படப்பிடிப்பு சென்று கொண்டு இருக்கையில் எதிர்பாராத விதமாக 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் படப்பிடிப்பு கிடப்பில் கிடந்தது.

இதனால் இயக்குனர் ஷங்கரும் வேறு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கமலஹாசனும் லோகேஷ் உடன் இணைந்து விக்ரம் என்னும் படத்தில் நடித்திருந்தால் இந்த படமும் வெளியாகி உள்ள நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். இந்தியன் 2 படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பில் நடித்திருந்த நெடுமுடி, விவேக், வேணு போன்றவர்கள்உயிரிழந்துள்ளனர்.

மேலும் நடிகை காஜல் அகர்வாலும் கர்ப்பமாக இருந்ததால் இந்தியன் 2 படத்தில் நடிக்கவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால் தற்போது அவர் குழந்தை பெற்றுக் கொண்டு உடம்பை செம ஃபிட்டாக வைத்துள்ளதால் மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறேன் என சம்மதம் தெரிவித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி முதலில் இருந்து துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

karthik
karthik

இந்த நிலையில் பட குழு மீண்டும் இந்தியன் 2 படத்தில் நடிக்க சில முக்கிய நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்தியை படக்குழு கமிட் செய்துள்ளது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் படத்தில் கமல் மற்றும் கார்த்தியின் கூட்டணியை பார்க்க ஆவலாக இருந்து வருகின்றன.