சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் என்ற அந்தஸ்தை பெற்று வலம் வருவதோடு நம்பர் ஒன் ஹீரோவாகவும் இருக்கிறார் இவர் திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்துக் கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
அதை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். அப்படி நெல்சன் சொன்ன கதை ரொம்ப பிடித்துப்போகவே தனது 169 ஆவது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை அவரிடம் கொடுத்துள்ளார் தற்பொழுது இந்த படத்தின் பூஜை அனைத்தும் போடப்பட்டு ஷூட்டிங் சூப்பராக நடைபெற்று வருகிறது இந்த படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ரஜினியுடன் கைகோர்த்து இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், சிவ ராஜ்குமார் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் சென்னையில் ஜெயிலர் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது முதல் கட்ட படப்பிடிப்பில் போலீஸ் ஸ்டேஷன் போன்ற செட் அமைக்கப்பட்டு சூட்டிங் எடுக்கப்பட்டு வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் ஜெயிலர் படத்தில் மற்றொரு முக்கிய பிரபலம் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். 90 காலகட்டங்களில் இருந்து தமிழ் சினிமாவில் பல்வேறு குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் சரவணன் இவர் பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்து பிரபலமடைந்தார்.
அதன் பின் பல்வேறு படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்த இவர் தற்பொழுது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதுவும் இந்த படத்தில் அவர் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெகு விரைவில் வரும் என கூறப்படுகிறது.