மிரட்டலாக உருவாக இருக்கும் தளபதி 67.! வில்லனாக கௌதம் மேனனை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல இயக்குனர்..

thalapathy-67
thalapathy-67

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும்  சினிமா வட்டாரத்தில் அதிக ரசிகர்களைக் கொண்டு முதலிடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா அவர்கள் நடித்த வருகிறார்.

தற்போது நடிகர் விஜய்க்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க இயக்குனர்கள் கதையை கையில் வைத்துக் கொண்டு லைனில் நிற்கின்றனர். அப்படி நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைய உள்ளதால் வாரிசு திரைப்படத்தை விட தளபதி 67 திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தளபதி 67 குறித்து அவ்வப்போது அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டே இருக்கும் நிலையில் மேலும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தளபதி 67 திரைப்படத்தில் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், பிருத்திவி ராஜ், ஆகியோர் வில்லனாக நடிக்க உள்ளனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் மேலும் தற்போது ஒரு இயக்குனர் இந்த படத்தில் ஒரு வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி 67 திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் ஒரு வலுவான வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதுமட்டுமல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிஸ்கினிடம் இது பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மிஸ்கின் அவர்கள் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்தில் ஒரு வில்லன் கேரக்டராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.